கூடுதல் அரசு அலுவலக கட்டிட திறப்பு விழா
ராமநாதபுரம் ஆகஸ்ட் - 23
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சியை சேர்ந்த சாத்தான்குளம், சண்முகவேல் நகர், டாக்டர் அம்பேத்கர், நகர் கற்பூரவலசை, தென்னம்பிள்ளை வலசை, சங்கந்தியான் வலசை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு பயன்படும் வகையில் சாத்தான்குளம் கிராமத்தில் கூடுதல் அரசு அலுவலக கட்டிடத்தை அதன் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர். திருமதி எம்.சித்ரா மருது திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் ஆர். ஜி. மருதுபாண்டியன் அவர்கள், தலைமையில் அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மரக்கன்றுகள் நட்டு வைத்தார். இவ்விழாவில் கிராம தலைவர்கள் பொதுமக்கள், திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர், N.A. ஜெரினா பானு

