32-வது கிருஷ்ண ஜெயந்தி விழா
ராமநாதபுரம் ஆகஸ்ட்-31
ராமநாதபுரம் மாவட்ட, அச்சுந்தன்வயல் கிராமத்தில் அருள் பாலித்துகொண்டிருக்கும், அருள்மிகு பாமா ருக்மணி சமேத அருள்மிகு கண்ணபிரான் ஆலய ஸ்ரீ பாமா ருக்மணி சமேத கண்ணபிரான் ஆலய 32-வது கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று (31.08.2021) காலை 8 மணி முதல் மஞ்சள் நீராட்டு விழா கண்ணன் அழைப்பு, உறியடி உற்சவ விழா, அன்னதானம், கண்ணன் தேர் ஊர்வலம், கண்ணனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று மதியம் சரியாக 1- மணிக்கு தலைவர் திரு.செட்டியப்பன் தலைமையில், அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளாமான கிராமத்து மக்கள் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு

