ராமேஸ்வரம் திருக்கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்க வேண்டி ராமநாதபுரம் எம்.பி. கோரிக்கை
ராமநாதபுரம் ஆகஸ்ட்-28
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்தார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவில் திருக்கோவிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட அனுமதி அளிக்க வேண்டி அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கம் ஏற்கனவே கோரிக்கை விடுத்ததை அடுத்து இன்று யாத்திரை பணியாளர் சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா அவர்களை, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், கே. நவாஸ்கனி அவர்கள், சந்தித்துப் பேசினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் இந்துக்களின் புனித தலமான ராமன் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்க வேண்டி அகில இந்திய ஆசிரியர் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து நேற்று சங்க பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியரை நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி அவர்கள், சந்தித்தார் புண்ணிய தீர்த்தங்களில் நீராட அரசு அனுமதி அளிக்காததால் அங்கு பணி செய்து வரும் 425 பணியாளர்களின் குடும்பங்களில் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக சங்க பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர் இதனையடுத்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், அவர்களின் வாழ்வாதார பாதிப்படையாது நடவடிக்கை மேற்கொள்ளவும், மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். இது குறித்து தமிழக முதல்வர் பார்வைக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு
