RTE சட்டத்தை காலில் போட்டு மிதிக்கும் பள்ளிக்கல்வித்துறை.
இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி தனி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
2013 முதல் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள் இதன் படி ஒரு பள்ளியில் எல்கேஜி மாணவர்களை சேர்க்கும் போது ஒரு பிரிவிற்கு 8 மாணவர்கள் வீதம் அந்த பள்ளியில் எத்தனை பிரிவுகள் இருக்கிறதோ அதற்கு ஏற்றார்போல் RTE இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது கடந்த 2020 21 ஆம் கல்வியாண்டில் அதுவே தொடர்ந்தது.
கடந்த கல்வி ஆண்டில் corona தொற்றின் காரணமாக பல பள்ளிகளில் இந்த RTE இட ஒதுக்கீட்டின் படி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப முடியவில்லை காரணம் பள்ளிகள் திறக்கப்படாததும் வகுப்புகள் நடத்தப்படாததும் தான்.
யாரும் இல்லாத கடையில் எதுக்கு டீ ஆத்துற என்பதுபோல் திறக்கப்படாத பள்ளிக்கு எதற்கு மாணவர் சேர்க்கை என்று யாருமே பள்ளி பக்கம் வரவில்லை பள்ளிகள் திறந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று பெற்றோர்கள் அமைதியாக இருந்துவிட்டனர் இதனால் கடந்த ஆண்டு RTE மாணவர் சேர்க்கை பெருமளவு குறைந்து விட்டது.
இந்த நிலையில் இந்த 2021 22ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஜூலை 5-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் Intake Capacity விவரங்களை கல்வித்துறை அதிகாரிகள் கேட்டு வருகிறார்கள்.
தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் உள்ள வழக்கமான இடங்களை அளித்து வருகிறார்கள் இதை கல்வித்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு எல் கே ஜி யில் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்தார்களா அதற்கு ஏற்றார் போல் தான்RTE இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறி வருகிறார்கள்.
இப்படி எந்த ஒரு அரசாணையும் வெளியிடாத நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் வாய்மொழியாக பள்ளி நிர்வாகிகளை அச்சுறுத்தி வருகிறார்கள்.
கல்வித்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது.
கல்வித்துறை அதிகாரிகளின் இந்த அராஜகச் செயல் RTE சட்டத்தையே காலில் போட்டு மிதிக்கும் வண்ணம் உள்ளது ஏழை மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமையை தட்டி பறிப்பதாக அமைந்துள்ளது
இதற்கு காரணம் RTE மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைகிறது என்பது தான் கொஞ்சம் நஞ்சம் உள்ள ஏழை மாணவர்களை கூட இந்த திட்டத்தில் தனியார் பள்ளிகளில் சேர்ந்து விட்டால் எங்கள் நிலை என்ன ஆவது என்கிற அவர்களின் கோரிக்கையை ஆதரிக்கின்ற வகையில்தான் பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.
கல்வித்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை வெகுவாக பாதிக்கின்றது கடந்த ஆண்டு corona தொற்றின் காரணமாக எல்லா பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை குறைந்தது என்பது உண்மைதான். இதை காரணம் காட்டி ஒவ்வொரு பள்ளியின் Intake Capacity குறைப்பது என்பது RTE சட்டத்திற்கு எதிரானது.
கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தால் அதிகமான அளவில் மாணவர்கள் சேர்ந்து இருப்பார்கள் கடந்த ஆண்டு எல்.கே.ஜி. சேராத மாணவர்கள் கூட இந்த ஆண்டு யூ.கே.ஜி. சேர்க்கை வேண்டும் என்று கேட்கிறார்கள் அது மட்டுமன்றி இந்த ஆண்டு எல்.கே.ஜி. சேர்க்கைக்கு கூட மிக அதிகமான மாணவர்கள் இருக்கிறார்கள் பள்ளிகள் உடனடியாக திறக்கப்பட்டால் தான் இதன் உண்மை நிலை தெரியவரும்.
இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் ஒவ்வொரு பள்ளியின் Intake Capacity குறைப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
எனவே கல்வித்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதை விட்டுவிட்டு பழைய நடைமுறை படியே எல்லா பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்கள் மற்றும் பள்ளி தாளாளர்களின் வேண்டுகோள்.
இதுமட்டுமின்றி கடந்த கல்வியாண்டிலும் இந்த கல்வியாண்டிலும் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட மற்ற வகுப்பு மாணவர்களை கூட எந்தவித ஆவணங்களும் கேட்காமல் அத்துமீறி அரசு பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள் அவர்களுக்கு அரசாங்கம் வழங்கி வருகின்ற சலுகைகளை தட்டிப் பறித்து வருகிறார்கள்.
இதனால் தனியார் பள்ளிகளில் இந்த திட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக சரிந்துவிட்டது.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்த இந்த அடாவடி செயலால் அவர்களின் தரமான கல்வி பாதிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் மேல்நிலை வகுப்பு வரை அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளும் தடுக்கப்பட்டுள்ளது.
லாக் டவுன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அரிசி பருப்பு முட்டைக்காக ஓடிவந்த இவர்கள் மீண்டும் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து படிக்க வேண்டும் இன்று நினைத்தாலும் இயலாமல் போகின்றது.
ஒரே அடியாக அரசு பள்ளிகள் இப்படி எல்லாம் மாணவர்களை சேர்த்து அவர்களுக்கு எப்படி ஒரு தரமான கல்வி கொடுக்கப் போகிறது என்பதுதான் அனைவரின் கேள்வி.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஆசிரியர்கள் முதற்கொண்டு இயக்குனர் பெருமக்கள் வரை செய்து வருகின்ற பொய் பித்தலாட்டங்கள் எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை.
இதுவெல்லாம் தரமான கல்விக்கு வழி காட்டுமா...? ஊழல், ஊதாரிதனத்தை வளர்த்தெடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
