ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு பள்ளி நிர்வாகிகளுக்கு நந்தகுமார் வேண்டுகோள்...

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு பள்ளி நிர்வாகிகளுக்கு நந்தகுமார் வேண்டுகோள்...


 தனியார் பள்ளிகளுக்கு நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்துள்ள நிலையில்நம்மையும் நம் சொத்துக்களையும் பாதுகாத்துக்கொள்ளநமது உரிமைகளை மீட்டெடுத்து தரமான கல்வி அனைவருக்கும் தொடர்ந்து கிடைத்திட...

 டிசி இல்லாமல் மாணவர்களை சேர்ப்பதை உடனடியாக கைவிட வேண்டும்..

உடனடியாக அனைத்து வகை பள்ளிகளையும்  படிப்படியாக திறந்திட....

தனியார்  பள்ளிகளுக்குரிய நியாயமான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்திட.....

ஆர். டி.இ. கல்வி கட்டண பாக்கியை உடனே அனைவருக்கும் கிடைத்திட......

 பள்ளி வாகனங்களுக்கான இருக்கை வரி இன்சூரன்ஸ்

சாலை வரி எப்.சி செய்வதிலிருந்து பள்ளிகள் திறக்கும் வரை விதிவிலக்கு பெற்றிட.....

தனியார் பள்ளி கட்டிடங்களுக்கு

மட்டும் சொத்து வரி கட்டுவதில் இருந்து விதிவிலக்கு பெற்றிட..

 நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகள் ஆக தரம் உயர்த்திட ....

 தனியார் பள்ளிகள் அனைத்திற்குமான தனி இயக்குனரகம் உடனே தொடங்கிட....

 அங்கீகாரம் முடிந்த அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக தொடர் அங்கீகாரத்தை மூன்றாண்டுகளுக்கு எந்தவித சான்றோர்களும்  நிபந்தனையும் நிர்ப்பந்தமும் இல்லாமல்  உடனே வழங்கிட...

 2011க்கு முன் கட்டப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் டிடிசிபி கட்டிட அனுமதி கேட்காமல் விதிவிலக்கு வழங்கிட.....

 அங்கீகாரம் பெற்று பத்தாண்டுகள் அனுமதி கிளப்பி நிரந்தர அங்கீகாரம் வழங்கிட...

 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்வு முடிவுகளை தனியார் பள்ளிகளுக்கும் அரசு பள்ளிகளுக்கும் தனித்தனியாக வெளியிடவேண்டும்...

 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுடன் வரும்  வாரம் நேரடிசந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவு எடுத்திருக்கிறோம்.

 அதற்காக தமிழகத்தில் உள்ள 12 தனியார் பள்ளி சங்கங்களை ஒருங்கிணைத்துஜாயின்ட் ஆக்சன் கமிட்டீ பார் பிரரைவேட்  ஸ்கூல்ஸ் அசோஷியேஷன்என்கிற பெயரில் தனியார் பள்ளிகள் சங்கத்தின் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். அந்த சங்கத்தின் நிர்வாகிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை இதய சுத்தியோடு ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

 அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் மேற்கண்ட 12 சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டமைப்பு வரும் காலங்களில் சந்தித்து பிரச்சனைகளை பேசி தீர்த்து உரிய நடவடிக்கைகள் எடுப்பது என்றும் தேவைப்பட்டால் நீதிமன்றம் சென்று இணைந்து வழக்காடுவது என்றும் முடிவெடுத்திருக்கிறோம்...

 கூட்டத்தில் சங்கத் தலைவர்கள்

பி.டி. அரசகுமார் பேராசிரியர். ஏ. கனகராஜ். கே ஆர். நந்தகுமார் டி.என்.சி. இளங்கோவன். ஐ.மனோகரன் ஜெயக்குமார். மார்ட்டின் கேண்ணடி நீலன் அரசு. டேனியல் தாமஸ் சபையர். G. .R. ஸ்ரீதர். பெப்க்ஷா ஆறுமுகம். சாரதா கண்ணன் ரமேஷ் குமார். சி .எஸ். ராஜா ஆகிய சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு மேற்கண்ட முடிவுகள் எடுத்து உடனே அமல்படுத்த தலைவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் அறுசுவை உணவை பேப்சிட் தலைவர் டிஎன்சி இளங்கோவன் அவர்கள் மிகச்சிறந்த ஏற்பாட்டை செய்திருந்தார்.

 ஒற்றுமையே பலம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு தனி மரம் தோப்பாகாது ஒரு கை ஓசை பயன்தராது என்பதை நாங்கள் அனைவரும் உணர்ந்து ஒன்று பட்டுள்ளோம்..

 இப்பொழுதாவது  பள்ளி நிர்வாகிகள் நம்பிக்கையோடு நமது மாநில சங்கத்தில் இணைந்து பணியாற்றுங்கள் என்று அன்போடு வேண்டிக் கேட்டுக் சொல்கிறேன்  .

 அன்புடன் உங்கள் 

கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.