என் இல்லத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தொண்டர்கள் வரலாம், கோரிக்கை வைக்கலாம் ; எடப்பாடியார் பேச்சு .....
என் இல்லத்திற்கு எப்போது வேண்டுமானாலும் தொண்டர்கள் வரலாம், கோரிக்கை வைக்கலாம்
தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் ஒவ்வொருவரும் செயல் வீரர்கள் தான்.
ஐ.டி.விங்கில் உண்மையாக உழைப்பவர்களுக்கு இனி வரும் காலத்தில் மிகுந்த உயரிய அங்கீகாரம் கிடைக்க நான் உறுதுணையாக இருப்பேன்.
இங்கே யாருக்கும் யாரும் அடிமை இல்லை, எல்லோரும் ஒருங்கிணைந்து கழகதிற்காக உழைக்க வேண்டும்.
அடுத்து நாம் தான் தமிழகத்தை ஆள போகிறோம், அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
பதவி வெறி பிடித்து போகிறவர் போகட்டும், துரோகிகள் இல்லாத கழகமாக மாறி வருகிறது.
அம்மாவின் ஆசியுடன் கழக ஆட்சி அமையும் இது உறுதி, யார் என்ன சொன்னாலும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் கழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுங்கள், உங்கள் அனைவருக்கும் நல்ல பிரகாசமான எதிர்காலம் உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
