நரிக்குறவர் பிரிவு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்
ராமநாதபுரம் ஜூலை-2
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் வட்டம் காட்டூரணி பகுதியில் இன்று (02.7.2021) சுகாதாரத் துறையின் சார்பாக நடைபெற்ற நரிக்குறவர் பிரிவு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜே.யு.சந்திரகலா அவர்கள் நேரில் பார்வையிட்டார்கள். இம்முகாமில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 நரிக்குறவர் பயனாலிகளுக்கு மாதந்திர உதவித்தொகை தலா ரூ.1000 பெறுவதற் கான ஆணைகளையும், அரிசி மற்றும் காய்கறி பொருட்களையும் வழங்கினார். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) ரவிச்சந்திரன், தாசில்தார் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவர் Dr. எபனேசர், மருத்துவர் அலுவலர் Dr. நிலோபர் நிஷா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேவுகபெருமாள், தங்கபாண்டியன் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்திதா மற்றும் நரிக்குறவர்கள், அரசு அலுவலர்கள், பேராவூர் ஊராட்சி மன்றத் தலைவர் Dr. ஜெயலட்சுமி மாரிமுத்து ஊராட்சி செயலாளர் ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு

