ஓசூர் காவலர் குடியிருப்பு எதிரில் குப்பையில் மாருதி கார்
ஓசூர் வட்டாட்சியர் அலுவலக சாலை எதிரில் உள்ளது காவலர் குடியிருப்பு.இந்த காவலர் குடியிருப்பு பகுதியில் வசிப்போர் குப்பைகளை அந்த காவலர் குடியிருப்பு எதிரிலுள்ள குப்பை கொட்டும் இடத்தில் கொட்டுகிறார்.அந்தக் குப்பை கொட்டும் இடத்தில் பல மாதங்களாக ஒரு மாருதி கார் பயன்படுத்தப்படாமல் காவலர்களால் அங்கே குற்றச் செயலில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள ஸ்பேர் பார்ட்ஸ் முழுவதும் வீணாகிவிட்டது ஆனால் அந்த சிறிய சாலையை அடைத்துக் கொண்டு அந்த மாருதி கார் அங்கேயே பல மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது இதனால் அந்த சாலையில் பயன்படுத்துவோர் முழுமையாக வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். போக்குவரத்து குற்றச் செயலில் ஈடுபட்டதாக அந்தக் காரை அங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதனை ஓசூர் டிஎஸ்பி முரளி சார் இந்த வாகனத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
