ராமநாதபுரத்தில் இ.யூ.மூ. லீக் இல்ல பெயர் சூட்டு விழா (ம) மார்க்க திருமண நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தில் இ.யூ.மூ. லீக் இல்ல பெயர் சூட்டு விழா (ம) மார்க்க திருமண நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் இ.யூ.மு.லீக் முன்னாள் தலைவர் சேக்தாவூத் மற்றும் ராமநாதபுரம் நகர்மன்ற 19-வது வார்டு முன்னாள் உறுப்பினருமான சேக்தாவூத் புதல்வர்கள் ரஹ்மத்துல்லாஹ் மகனுக்கும், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் சிராஜுதீனின் மகனுமாகிய முகம்மது சேக் முபித்திற்கும் இன்று மாலை 5 -மணி அளவில் மாநில பொருளாளர் MSA.சாஜஹான் தலைமையில் மார்க்க திருமணம் நண்பர்கள் சுற்றத்தார் முன்னிலையில் மார்க்க திருமணம் இனிதே நடைபெற்றது. முன்னதாக. ராமநாதபுரம் நகர் செயலாளர் ஹதியத்துல்லா, மாநில மாணவரணி சிராஜுதீன் அண்ணனுமாகிய குதரத்துல்லாவின் மகள் சமீஹா பேகதிற்கு சடங்கு வைபவம் நடைபெற்றது. இதில் மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் இ.யூ.மு. லீக் மாநில பொருளாளர் சாஜஹான் தலைமையிலும் ராமநாதபுரம் எம்பி.கே.நவாஸ்கனி முன்னிலையிலும் உற்றார் உறவினர்கள், அன்பர்கள், நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. முன்னதாக சிராஜுதினின் மகளுக்கு ராமநாதபுரம் எம்பி.கே.நவாஸ் கனி, நபிகா இஷா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்வில் இ.யூ.மு.லீக் மாவட்ட செயலாளர் MSAL. முகம்மது பைசல், மாநில ஊடகப்பிரிவு துணை அமைப்பாளர் அப்துல் ஜபார் , ராமநாதபுரம் திமுக நகர்ச்செயலாளர் கார்மேகம், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் மாவீரன் வேலுச்சாமி, எம்பி. பிஏ. நேர்முக உதவியாளர் அன்சாரி, மாநில மாணவரணி இணைச்செயலாளர் ஈரோடு முகம்மது ஃபாரூக். மாவட்ட துணைச்செயலாளர் முகம்மது யாகூப், மாவட்ட துணைத் தலைவர் சாதுல்லாக்கான், தலைமை நிலைய பாடகர் சீனி முகம்மது, நகர்பொருளாளர் ஹாஜா முகைதீன், நகர் உலமாக்கள் அணி அமைப்பாளர் அன்வர் அலி ஆலிம், பாசிப்பட்டறை தெரு பேஷ் இமாம், அப்துல் காதர் சிராஜி மற்றும் தொழிலதிபர் அபுதாகீர், செய்யதம்மாள் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜாகீர் உசேன் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினார்கள்.
ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு
