ரோட்டரி சங்கத்தின் சார்பில் தடுப்பூசி முகாம்
ஜூலை-1
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் ராமநாதபுரம் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி முன்னாள் ஆளுநர் Dr.சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார், ராமநாதபுரம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகளாக தலைவர் செந்தில் குமார், செயலாளர் ஆத்மா பிரதீப், பொருளாளராக சஜன்ஷா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். கோவிஷீல்டு சுமார் 200 பேருக்கு Dr. நிலோபர் தலைமையில் போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரொட்டேரியன் ரமேஷ்பாபு, Dr.கீதா ராமேஷ் உள்ளிட்ட ரோட்டரி சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு
