யோகா ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

 யோகா ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு 

      தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை வேண்டி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

              கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் குரானா  பெரும் தொற்று நோயின் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது .இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளில் இணைய வழி வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கு யோகாசனம் கற்றுக் கொடுக்க  பள்ளி நிர்வாகம் யோகாசனத்தில் பட்டம் முடித்த யோகா ஆசிரியர்களை நியமித்து இருந்தது .அந்த யோகா ஆசிரியர்கள்  ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்பு இழந்து வருமானம் இழந்து மிகவும் வறுமை நிலையில் உள்ளனர்.   தற்போது உள்ள ஆட்சி மாற்றத் சூழ்நிலையில் வறுமையில் தவிக்கும் இந்த யோகா ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஏதாவது நலத்திட்ட உதவிகளும், வரும் கல்வியாண்டில் வேலை வாய்ப்பில்லாமல் தவிக்கும் யோகா ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் யோகா ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகி குணசேகரன் மற்றும் யோகா ஆசிரியர்களும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.