அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களே கௌரவப்படுத்திய சமூக சேவை சங்கங்கள்
உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கமும் ஆசனூர் RCC குழுமமும் இணைந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ப்பதற்கான மாணவர்களை உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து பள்ளிக்கு அழைத்து வந்து மாணவர் சேர்க்கையை உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் திரு ரமேஷ் பாபு அவர்கள் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.. இந்நிகழ்வில் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவரும் அன்புச் சுவர் திட்ட ஒருங்கிணைப்பாளர்திரு அன்பழகன், செயலாளர் செந்தில் குமரன் பொருளாளர் முருகன் ஆர் சி சி குழுமத்தின் தலைவர் ஆறுமுகம் செயலாளர் நிர்வாகி சரவணன் தாமோதரன் ஆசிரியர் உள்ளிட்ட நிர்வாகிகளும் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் உதவி ஆசிரிய பெருமக்களும் மாணவர்களின் பெற்றோர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் விழா இனிதே நிறைவுற்றது .
