கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அறவழி போராட்டம்

கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அறவழி போராட்டம்

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் வட்டம் கெங்கபுரம்  கிராமத்தில் சுமார் 1500 ஆண்டு பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில்,அதே கிராமத்திற்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் குடி வந்த தனிநபர் ஒருவர் அரசியல் பின்புலத்தை கொண்டு மத ஒற்றுமையை சீர் குலைக்கும் வகையிலும் மத கலவரத்தை தூண்டும் வகையிலும் அந்த கோவில் இடத்தில் நீண்ட நாட்களாக இறைச்சிக் கடை கழிவுகளை கொட்டி வந்ததோடு மட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் இரவோடு இரவாக கொட்டகை அமைத்து அவ்விடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது தொடர்பாக கிராம மக்கள்  காவல் நிலையத்தில் புகார் செய்தும் எந்த பலனும் இல்லாததை அடுத்து இன்று 01.07.2021 கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தனர். தகவல் அறிந்து வந்த  காவல்துறை உயர் அரிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு துணை ஆட்சியர் முன்னிலையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு முற்று புள்ளி வைத்தனர்.