பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய சிதம்பரம் நீதிபதி மீது வழக்குப்பதிவு

 பெண் வழக்கறிஞரை ஏமாற்றிய சிதம்பரம் நீதிபதி மீது வழக்குப்பதிவு


சென்னை, குன்றத்துார் அடுத்த கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், கணவரை பிரிந்து தனியாக வசித்தார்.

இந்நிலையில், மனைவியை பிரிந்து வாழ்ந்த வழக்கறிஞர் சந்தானம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், சந்தானத்திற்கு சிதம்பரம் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பணி கிடைத்தது. 

இதையடுத்து, மனைவியுடன் சேர்ந்ததால், கடந்தாண்டு முதல் பெண் வழக்கறிஞரை நிராகரித்து வந்துள்ளார். 

இந்நிலையில், தன்னிடம்10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மே மாதம் பெண் வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார்.

இதன்படி, மாஜிஸ்திரேட் சந்தானம் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, சமூக வலைதளங்களில் நேற்று பரவியது.

இது குறித்து பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமியிடம் கேட்டபோது, ''நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.