தனியார் பள்ளிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரி தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் உடன் ஒரு சந்திப்பு
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள் தலைமையில் இன்று தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு கருப்பசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அச்சமயத்தில் நமது தனியார் பள்ளிகள் சந்திக்கும் பல பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துக் கூறினோம் உதாரணமாக T.C இல்லாமல் பள்ளிகளில் சேர்ப்பது குறித்து ஆலோசித்தோம் T.C வாங்கி கொண்டு அரசு பள்ளிகளில் சேர்க்க தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வலியுறுத்தினோம். மேலும் RTE சேர்க்கையின் போது கடந்த வருடத்தை ஒப்பிட்டு விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைத்து விட வேண்டாம் எனவும் அதற்கு முந்தைய வருடத்தின் அடிப்படையில் செயல்படுத்த வலியுறுத்தினோம். தொடர் அங்கீகாரம் நிலுவையிலுள்ள நர்சரி பிரைமரி பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகளுக்கு உடனடி ஆணைகள் வழங்க வலியுறுத்தினோம் எங்களுடைய கோரிக்கைகளை மிகவும் அமைதியுடனும் நேர்த்தியுடனும் கேட்டுக்கொண்டு அதற்கு ஆவன செய்ய உறுதி அளித்து உள்ளார்கள் இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட தலைவர் திரு சுபாஷ் கண்ணா, மண்டல செயலாளர் பெஸ்ட் ராஜா, மாவட்ட பொருளாளர் பாரத் வித்யாலயா பாஸ்கர், தென்காசி வட்டார ஒருங்கிணைப்பாளர் மகரிஷி முத்தையா, இசக்கி துரை மற்றும் நானும் கலந்து கொண்டோம்.
*தி.ஹக்கீம்* மாவட்டசெயலாளர்.
