சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் நினைவஞ்சலி விழாவை அரசு விழாவாக நடத்த வலியுறுத்தல்
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் அவர்களின் நினைவஞ்சலி விழாவை அரசு விழாவாக நடத்த வலியுறுத்தி பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவர்கள் தீரன் சின்னமலை, மாவீரன் பொல்லான் ஆகியோர் ஆகும் இவர்களின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் என இளைஞர் பேரவை தலைவர் வடிவேல் ராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் .அதன்படி தீரன் சின்னமலை நினைவு நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது . அதேபோல் மாவீரன் பொல்லான் நினைவு நாளும் அரசு விழாவாக நடைபெற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து இரண்டு வருடங்களாக மொடக்குறிச்சி சமுதாயக் கூடத்தில் பொல்லான் நினைவு நாள் அரசு விழாவாக இரண்டு மணி நேரம் மட்டுமே சம்பிரதாயத்துக்கு எளிய முறையில் நடைபெற்றது. இதற்கு மாற்று சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .எனவே இந்த ஆண்டு வரும் பொல்லான் நினைவுநாளை அனைத்து கட்சி தலைவர்கள் இயக்க தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்ளும் வகையில் காலை 9 மணி முதல் 5 மணி வரை கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
