கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் அழிப்பு
*கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் இன்று கல்வராயன் மலை பகுதியில் சாராய ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது கரியாலூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நொச்சிமேடு கிராம ஓடை அருகில், ஆண்டி என்பவர் சாராயம் காய்ச்சுவதற்காக ஐந்து பேரரில் வைத்திருந்த ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மற்றும் காவல்துறையினர் கண்டுபிடித்து, அதே இடத்தில் அழித்தனர்.*
*தொடர்ந்து, வெள்ளிமலை சமுதாய கூடத்தில் மதுவிலக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.*
*இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்கள் கல்வராயன்மலை பகுதியில் அதிகம் வளைவுகள் உள்ளது கவனமாக செல்ல வேண்டும் தலைகவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மேலும் கள்ளச்சாரயம் காய்ச்சும் தொழிலில் யாரும் ஈடுபட கூடாது, கல்வி, வேலைவாய்ப்பில் அரசு வழங்கும் சலுகைகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் மேலும் தற்போது கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.*
*மேலும் கல்வராயன் மலை பகுதியில் தொடர்ந்து சாரய ஊறலை அழிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபடுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்.*