கிரஸன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம்

கிரஸன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  கொரோனா தடுப்பூசி  முகாம்


ராமநாதபுரம் ஜூலை-03

ராமநாதபுரம்  மாவட்டம் ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பள்ளி  வாசல் தெரு கிரஸன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று 3.7.2021 கொரோனா தடுப்பூசி  முகாம் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் சார்பில் ராமநாதபுரம் M.P. மாண்புமிகு K. நவாஸ் கனி MP தலைமையிலும் மாநில பொருளாளர் ஹாஜி M.S.A.ஷாஜகான் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் சுமார் 350 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்த முகாமினை ராமநாதபுரம் MP.K. நாவாஸ்கனி, மற்றும் மாநில பொருளாளர் M.S.A.சாஜஹான் ஆகியோர் பார்வையிட்டனர்.


இதனையடுத்து இ.யூ.மு.லீக்கின் மாவட்ட செயலாளர் M.S.A.L.முகம்மது பைசலின் சின்னம்மாவும் ராமநாதபுரம் ராயல் லாட்ஜ் உரிமையாளர் பஷீர் Ex.MC அவர்களின் மனைவியுமான ஜனாபா. மும்தாஜ் வஃபாத் ஆனதால் அன்னாருடைய இல்லத்திற்கு ராமநாதபுரம் MP.K. நாவாஸ்கனிசென்று துக்கம் விசாரித்த போது எடுத்த படம்  உடன் ஊராட்சிக்குழு துணைத்தலைவர் மாவீரன் வேலுச்சாமி ராமநாதபுரம் மாவட்ட இ.யூ.மு.லீக் மாநில ஊடக பிரிவு துணைச்செயலாளர் அப்துல் ஜபார் , நகர செயலாளர் ஹதியத்துல்லா, மாவட்ட துணைத்தலைவர் சாதுல்லாகான் மற்றும் உமர்முக்தார், முகமது ஆர்த்தி, கொழும்பு ஆலிம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் K. வருசை முகம்மது கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் S.சேகரன் (எ) வாசிம் அக்ரம் மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர். N.A. ஜெரினா பானு