எம். எல். ஏ. வாக தோற்ற எல் முருகன் மத்திய மந்திரி ஆனது எப்படி....? ருசிகர தகவல்கள்....!

எம். எல். ஏ. வாக தோற்ற எல் முருகன் மத்திய மந்திரி ஆனது எப்படி....?  ருசிகர தகவல்கள்....!


தமிழகத்தை சேர்ந்த எல்முருகன் ஒருவரை தவிர வேறு யாருக்கும் மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு இந்த முறை வழங்கப்படவில்லை. அமைச்சர் பதவிக்காக பெரிதும் காத்திருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் ரவீந்திரநாத்துக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை நடைபெற்றது. இந்த அமைச்சரவையில் மொத்தம் 43 பேர் இடம் பெற்றுள்ளனர்.

மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடியைத் தவிர்த்து 21 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர். இந்நிலையில் 12 பேர் ராஜினாமா செய்துள்ளனர். அந்த பொறுப்பிற்கு புதியவர்கள் பதவியேற்றனர்.

ஜோதி ராதித்யா சிந்தியா, சர்பானந்தா சோனோவால், நாராயண் ரானே, பசுபதி பராஸ், அனுப்ரியா படேல், பங்கஜ் சவுத்ரி, ரீட்டா பாகுனா ஜோஷி, ராம்சங்கர் கேத்ரியா, வருண் காந்தி, ஆர்.சி.பி சிங், லல்லன் சிங், ராகுல் கஸ்வான், சிபி ஜோஷி, சகல்தீப் ராஜ்பர் உள்ளிட்ட 43 பேர் அமைச்சர்கள் ஆனார்கள்.

இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த முருகன் ஒருவரை தவிர வேறு யாருடைய பெயரும் இடம் பெறவில்லை. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திராத் குமார் இந்த பட்டியலில் இடம் பெற வேண்டும் என்று டெல்லியில் முயற்சி செய்து வந்தார். ஆனால் அவருக்கு இந்த முறையும் இடம் தரப்படவில்லை. ஏற்கனவே இரண்டு முறை முயன்றும் இடம் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.


இதேபோல் தமிழக பாஜகவில் பொன்.ராதாகிருஷ்ணன், எல்.முருகன் ஆகியோர் பெயரும் அமைச்சருக்கான பட்டியலில் அடிபட்டது. ஆனால் கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை . இதேபோல் அன்புமணி ராமதாஸ் பெயரும் கூறப்பட்டது. அவருக்கும் இடம் தரப்படவில்லை. தம்பித்துரையும் முயற்சி செய்து வந்தார். டெல்லியில் தங்கி முயற்சித்த அவருக்கும் இடம் இந்த முறை கிடைக்கவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த முருகனை தவிர யாருக்குமே இந்த முறை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து சட்டசபை தேர்தலிலும் தோற்றதால் அதிமுகவை பாஜக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை குமரியில் நடந்த இடைத்தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் வென்று இருந்தால் அமைச்சராகி இருப்பார் என்றும் அவருக்கே அதிக வாய்ப்பு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அவரும் தோற்றதால் அமைச்சரவையில் இடம் தர பாஜக மேலிடம் விரும்பவில்லையாம். எனினும் எல் முருகனுக்கு மட்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கூட்டணி ஆட்சிக்கு அடித்தளம் போட்டது. தமிழகத்தில் 4 இடத்தில் வெற்றி பெற வைத்தது போன்ற காரணத்தால் முருகனுக்கு இணையமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

அவர் எம்எல்ஏ வாக தோற்றாலும் எம்பி ஆகாமலே மந்திரியாகி இருக்கிறார் .விரைவில் இந்தியாவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து இவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது.

எம்பியாக இருந்து எம்எல்ஏவாக ஆனவர்களே மந்திரியாக முடியவில்லை இது எதுவுமே இல்லாமல் அமைச்சர் ஆவது பெரிய விஷயம் அதற்கு அதிர்ஷ்டமும் கொஞ்சம் வேண்டும்.