மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் 


ராமநாதபுரம் ஜூலை-06 

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ராமநாதபுரம் மத்திய மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கீரை முஜிபுர் ரஹ்மான் தலைமை ஏற்றார் இதில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை கண்டிக்கும் விதமாக ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாட்டு வண்டியில் மோட்டார்,பைக் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றப்பட்டு வீதியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தமுமுக மாநில செயலாளர் சலீமுல்லா கான் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் தாகா புகாரி மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சரீப் தமுமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்கள் கலந்தர் ஆசிக் மற்றும் திமுக நகர செயலாளர் கார்மேகம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வழக்குரைஞர் ரவிச்சந்திரனின் தெற்கு திமுக நகர செயலாளர் பிரவீன் தங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்  முருகபூபதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சத்யராஜ் வளவன், சிறு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ் முருகன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் நகரச் செயலாளர் முஹம்மது அமீன் நன்றி உரை கூறினார் இதனை அடுத்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடிகள் மூன்று இடத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி