ராணிப்பேட்டை சிஎஸ்ஐ ஆலய வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சிஎஸ்ஐ தூய மரியாள் ஆலயம் , நகராட்சி , ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் இலவச தடுப்பூசி முகாம் சிஎஸ்ஐ தூய மரியாள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இதில் தூய மரியாள் ஆலய ஆயர் ராஜேந்திரன் இணை ஆயர் குளோரி ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி , வேலூர் பேராயர் ஷர்மா நித்யானந்தம் , , ஆகியோர் பங்கேற்று தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்தனர். மேலும் இதில் நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி , வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி விமலா , ரோட்டரி ஆளுநர் நிர்மலா ராகவன் சிஎஸ்ஐ ஆலய செயலாளர் நவீன் பிலிப் தேவகுமார் , பொருளாளர் இன்பராஜ் மற்றும் ஆலய குடும்ப உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...
