ஷேக் தாவூத் மறைவிற்கு கண்ணீர் அஞ்சலி அஞ்சலி.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில கல்வி ஆலோசனை குழு தலைவராய் நீண்ட நெடுங்காலம் நல்ல ஆலோசனைகளை வழங்கி வந்த மூத்த தலைவர் பரமக்குடி இந்தியன் மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகி மேதகு இந்திய ஜனாதிபதிஅப்துல் கலாம் அவர்களுடைய உறவினர் ஜனாப். ஷேக் தாவூத் 80 வயது அவர்கள் கொரோன நோய் தொற்று காரணமாக நேற்று மாலை இறைவனடி சேர்ந்தார்.
இன்று காலை அன்னாரின் நல்லடக்கம் நடைபெறுகிறது. அன்னாரை இழந்து வாடும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் கண்ணீர் அஞ்சலியையும் காணிக்கையாக்குகிறோம்.
கடந்த 20 ஆண்டுகளாக நமது மாநில சங்கம் எந்த மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் தவறாமல் கலந்து கொள்ளும் மிகச்சிறந்தசங்கத்தலைவர்....
இன்று நம்மிடையே இல்லை. அவர் வழி நடந்து அவர் கனவு மெய்ப்பட தமிழகம் முழுவதும் ஒரே சங்கம். நமது சங்கம் என்பதை நிலைநாட்ட இந்த நன்னாளில் சபதம் ஏற்போம்.
வற்றாத கண்ணீருடன்....
கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.
