போர் வெற்றி சுடர் ராமநாதபுரம்(உச்சிப்புளி) வந்தது

போர் வெற்றி சுடர் ராமநாதபுரம்(உச்சிப்புளி) வந்தது

1971- இல் நடந்த இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்  நடந்த போரில் வெற்றி அடைந்ததை கொண்டாடும் வகையில் போர் வெற்றி நினைவுச் சுடர் ராமநாதபுரம் உச்சிபுளி   13.07.2021 இரவு வந்தடைந்தது. 1920-இல் நாடெங்கும்  இந்த நினைவுச் சுடர் துவக்கப்பட்டது. இன்று காலை 14.07.2021  உச்சிப்புளி இந்திய கடற்படை விமான தளத்தில் ஜோதி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. முதலாவதாக கேப்டன் வெங்கடேஷ் ஆர் .அய்யர் (கமாண்டிங் ஆபீசர்)   மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து கேப்டன் மேனன், மற்றும்  கடற்படை வீரர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் எம்.என்.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் என் அ.ஜெரினா பானு