வியாபாரிகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு கூட்டம்
*கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி நகரத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி தலைமையில் தனியார் கூட்டரங்கில் கள்ளக்குறிச்சி நகரப்பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது*
*இதில் பேசிய கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி பேசுகையில் " கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து வியாபாரிகள் மற்றும் கடையில் பணியாற்றும் நபர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மீறினால் கடைக்கு சுகாதாரத்துறை சார்பில் சீல் வைக்கப்படும் என தெரிவித்தார்*
*இதில் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் முருகேசன்,உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்*

