கூடுவாஞ்சேரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் குடிநீர் முறையாக வழங்கப்படாத கண்டித்தும் சாலைகளில் மின் விளக்குகள் பராமரிக்காததை கண்டித்தும் மற்றும் சாலைகளை சீர் செய்யக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி பேரூராட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொண்டேன் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் காயரம்பேடு தேவராஜ் நகர செயலாளர் கணபதி தலைவர் குமார் பொருளாளர் செல்வி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் சமூக இடைவெளிவிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தின் முடிவில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுக்களை வழங்கினோம் இந்த பணிகளை விரைவாக முடித்து தருவதாகும் தொடர்ந்து இந்த பேரூராட்சியில் பல்லாண்டு காலம் பணி செய்பவர்கள் தான் இது போன்ற காரணங்களுக்கு இடையூறு என்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனைவரையும் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இருக்கிறோம்

