கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
*கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக சாலையோரத்தில் கயிறு கட்டப்பட்டுள்ளது. கயிற்றினை தாண்டி வாகனங்களை நிறுத்த வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.*
*இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் நான்குமுனை சந்திப்பில் ஆய்வு மேற்கொண்டார். கயிற்றுக்குள் வாகனங்கள் நிறுத்தப்படுகிறதா என பார்வையிட்டார். தொடர்ந்து பதிவெண் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு போக்குவரத்து காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.*
