சகி ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த சேவை மற்றும் பாதுகாப்பு மையம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி உட்கோட்டம் சமூக நல அலுவலகம் சகி ஒன் ஸ்டாப் சென்டர் மூலம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த சேவை மற்றும் பாதுகாப்பு மையம் துவங்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்பிற்கான அவசர சேவை மற்றும் ஆலோசனைகள் மருத்துவ வசதி காவல்துறையில் புகார் கொடுக்க பெண்களுக்கு உதவிகள் சட்ட உதவி மனநல ஆலோசனை தற்காலிகமாக தங்கும் வசதி போன்ற சேவைகளை மையத்தின் மூலம் பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என விழிப்புணர்வினை சேலத்தில் முதல் முறையாக காரிப்பட்டி காவல் நிலையம் டிஎஸ்பி மற்றும் காவல் நிலைய ஆய்வாளர் கள் மூலம் இன்று பெண்களுக்கான அவசர உதவி எண் 181 குறித்த விழிப்புணர்வு அயோத்தியபட்டினம் கோதண்டராமர் திருக்கோவில் முன்பு தொடங்கப்பட்டது
