கிருஷ்ணா கைனடிக் வெஹிகிள் ஷோரூம் திறப்பு விழா
ஜூலை-11
கிருஷ்ணா கைனடிக் வெஹிகிள் ஷோரூம் ராமநாதபுரம் இளமனூர் ரோடு அருகில், ரிங் ரோட்டில் திறந்து வைக்கப்பட்டது. இதை கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் மாதனூர் எம் கிருஷ்ணன் திறந்துவைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தாளாளர் கணேச கண்ணன் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் ஜீவ லதா, இயக்குனர் முனியசாமி மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர் ரவிச்சந்திரன் ராம வன்னி ராமநாதபுரம் டி சினிமா தியேட்டர் உரிமையாளர் தினேஷ், வேலுமாணிக்கம் கம்பெனியின் உரிமையாளர் வேலுமாணிக்கம் கதிரேசன் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் எம்.என்.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் என். அ.ஜெரினா

