அரசு பள்ளிகளை கண்காணிக்கஅவசர தொலைபேசி எண்... னை அறிமுகப்படுத்து...... .தமிழக அரசுக்கு கோரிக்கை......

 அரசு பள்ளிகளை கண்காணிக்கஅவசர தொலைபேசி எண்... னை அறிமுகப்படுத்து......   .தமிழக அரசுக்கு கோரிக்கை......


 தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் 14417 அறிவித்துள்ள மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கவனத்திற்கு.....

 அரசு பள்ளியிலும் இலவசம் என்று அரசு அறிவித்தாலும் தமிழ்நாடு முழுக்க  பெற்றோர் ஆசிரியர் கழகம் என்கிற பெயரில் எல்லாவற்றுக்கும் கட்டணம் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

 அதேபோல் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் பலரும் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவதில்லை. போதுமான ஆசிரியர்கள் இல்லை பள்ளிகளில் குடிநீர் வசதி.....கழிப்பறை வசதி ஆய்வக வசதி விளையாட்டு வசதி இல்லை என்பது தாங்கள் அறிந்ததே.

அர்ப்பணிப்பு உணர்வுடன் வாங்கும் சம்பளத்திற்கு எந்த ஆசிரியர்களும் பணியாற்றுவது கிடையாது.

 சொந்த வியாபாரம் வட்டிக்கு விடுதல் சங்கப் பணிகள் கட்சிப் பணிகள் என எப்பொழுதும் செல்போனில் பேசிக்கொண்டு கல்வி சார்ந்த பணிகள் செய்யாமல் அரசுக்கும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் விசுவாசம் இல்லாமல் பலரும் பள்ளிக்கே செல்லாமல்....பல்வேறு  செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

 பள்ளி வளாகங்களில் சுற்றுப்புற சுகாதாரம் பேணி காப்பது இல்லை.. இப்படி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.. இது குறித்தெல்லாம் புகார் செய்ய புகார் எண்...னை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

அப்போதுதான் தெரியும் அரசு பள்ளிகளின் உண்மைநிலை.

 ஏன் அரசுபள்ளிகளிள் 100 சதவீதம் கல்வி கிடைப்பது இல்லை எந்த நுழைவுத்தேர்விலும் வெற்றி பெறுவதில்லை இன்னும் எத்தனை காலத்திற்கு இலவசமாகத் தந்து நாமும் ஏமாந்து நம் மக்களையும் ஏமாற்ற போகிறோம்.

இன்றைக்கு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது, அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு அரசு பணி என்று அறிவித்திருப்பது, டிஎன்பிஎஸ்சி போன்ற அரசு பணிக்கான தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள சலுகைகள் அனைத்தும் அரசுப்பள்ளிகளை நம்பி வருகின்ற ஏழை மாணவர்களுக்காக இல்லை அது அரசு பள்ளிகளையும் அரசு பள்ளி ஆசிரியர்களின் காப்பாற்றத்தான்.

அரசு அதிகாரிகள் எத்தனை பேர் உண்மையாக பள்ளிகளை கல்வி சார்ந்து ஆய்வு செய்கிறார்கள் என்பதை உறுதி செய்யுங்கள்.

வெறும் புள்ளி விவரங்களை சேகரிக்க கூடிய அலுவலர்களாக அதிகாரிகள் செயல்படுவதைத் தடுத்து நிறுத்துங்கள்.

 தனியார் பள்ளிகளில் உள்ள கட்டுப்பாடுகள் அரசு பள்ளியிலும் இருந்தால் அரசு பள்ளிகளிலும் இருந்தால்தான் அதன் தரம் மேலும் உயரும். 

ஏன் அரசு பள்ளி ஆசிரியர்களை  பார்த்து அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் பயப்பட வேண்டும்.

கல்விக்காக அரசு போடும் மொத்த பட்ஜெட்டும் வீணாகிக் கொண்டிருக்கிறது.

 ஆனால் தனியார் பள்ளிகளுக்கு அரசு எந்த செலவும்  செய்வதில்லை.

 எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் அரசுப்பள்ளி ஆசிரியர்களைநம்பி ஏமாறாமல் லட்சக்கணக்கான மக்களின் கல்வி கனவை நனவாக்க செயல்படாத அதிகாரிகளை ஒதுக்கிவைத்துவிட்டு திட்டமிட்டு கண்காணித்து களப்பணி ஆற்றினால் நிச்சயம் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் மேம்படுத்த முடியும்.

அதற்காக உடனடியாக பொதுமக்களுக்கு பயன்படும் படி ஒரு அவசர கல்வி சேவை மற்றும் புகார் எண்  .... அறிவிக்கவேண்டும் என்று  தமிழக மக்கள் சார்பாக வேண்டுகின்றோம்

 அன்புடன்.

 கே ஆர் ரவிச்சந்திரன் ஆசிரியர்