வாலாஜாபேட்டையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதி மரணம்p

வாலாஜாபேட்டையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதி மரணம்


ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை விசாலாட்சி நகரில் வசிப்பவர் ஜி.ராமச்சந்திரன் வயது 64 இவர் பிஎஸ்என்எல் முதன்மை கணக்கு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர் திங்கள் கிழமை காலை வாலாஜா பஜாரில் சென்னை பஸ் நிறுத்தம் அருகே சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தார் அப்போது  அவர் எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சுய நினைவு இழந்து மயங்கி விழுந்தார் உடனடியாக அவரை வாலாஜா அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு உயிர் இழந்தார் இது குறித்து வாலாஜா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து நடந்த விதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்...