LPG Gas மானியம் – அறிந்து கொள்ளும் வழிமுறைகள்!!
மாதந்தோறும் நாம் வாங்கும் வீட்டு உபயோக சிலிண்டரின் மானியத்தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா? என்பதை இணையம் மூலம் தெரிந்து கொள்ளும் வழிமுறைகள் இப்பதிவில் வழங்கப்பட்டு உள்ளது.
சிலிண்டர் மானியம்:
2014-ம் ஆண்டில் சிலிண்டர்கள் மானியத்தை நிறுவனங்களுக்குக் கொடுக்காமல், நேரடியாக மக்களுக்கே வழங்கும் திட்டத்தை மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. அதன் படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் வாங்கும் போது நாம் கொடுக்கும் தொகையிலிருந்து மீதி மானியத் தொகையை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மானியத் தொகையை வங்கிகளிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தங்கள் மொபைல் போன் மூலம் மாதந்தோறும் சிலிண்டர் பதிவு செய்யப்பட்டு, சிலிண்டர் நிறுவன ஊழியர்கள் மூலம் வீட்டிற்கு நேரடியாக சிலிண்டர் டெலிவரி செய்யப்படுகிறது. நாம் சிலிண்டர் வாங்கியவுடன் அதன் மானியத்தொகை சரியாக நம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறா? என்பது குறித்து மக்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்த சந்தேகத்தை இணையம் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இணைய வழிமுறைகள்:
- முதலில் mylpg.in என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்.
- அதில் உங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கவும்.
- பிறகு பார் மெனுவுக்குச் சென்று ’Give your Feedback online’ என்பதை கிளிக் செய்யவும்.
- மொபைல் எண், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், விநியோகஸ்தர் விவரங்கள் நிரப்பவும்.
- பிறகு, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் ’Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ என்பதை கிளிக் செய்யவும்.
- புதிய பக்கம் திறக்கும் அதில் மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா? இல்லையா? என்பதை அதில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
