கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தில் நகர்புர வளர்ச்சி துறை அமைச்சர் K.N.நேரு, போக்குவரத்துதுறை அமைச்சர் R.S.ராஜகண்ணப்பன் ஆகியோர் நேரில் ஆய்வு
ஏப்-15
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள நரி பையூர் கிராமத்தில் செயல்படுத்தப்பட்ட கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தில் நேற்று(14.06.2021) நகர்புர வளர்ச்சி துறை அமைச்சர் K.N.நேரு, போக்குவரத்துதுறை அமைச்சர் R.S.ராஜகண்ணப்பன் ஆகியோர் நேரில் சென்று குடிநீர் வினியோக திட்டபணிகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் ஆட்சியர் ஜே.கே.பிரவீன்குமார், ராமநாதபுரம் நாடாளுமன்ற
உறுப்பினர் கே. நவாஸ் கனி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி S.முருகேசன் ஆகியோர் உடன் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு
