ஆகஸ்ட் மாதம் JEE, NEET 2021 தேர்வுகள்?

ஆகஸ்ட் மாதம் JEE, NEET 2021 தேர்வுகள்? 


மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மூன்றாம் கட்ட தேர்வு ஜூலை 25 க்குள் நடத்தப்படலாம் எனவும், நீட் 2021 தேர்வுகள் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

JEE தேர்வுகள்:

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ, சிஐஎஸ்இசிஇ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் மத்திய கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மூன்றாம் கட்ட தேர்வுகளும், நீட் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பிப்ரவரியில் முதல் கட்டமும், மார்ச் மாதத்தில் இரண்டாவது கட்ட JEE தேர்வுகள் நடந்து முடிந்தன.

JEE மெயின்ஸின் மூன்றாவது தேர்வு ஜூலை 25 க்குள் நடத்தப்படலாம் எனவும், நான்காவது தேர்வு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கு முன்பு நடத்தப்படலாம் என தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் கணினி அடிப்படையிலும், மேலும் பரீட்சை மையங்களில் அதிக கூட்டத்தை தவிர்ப்பதற்காக மூன்று – நான்கு நாட்கள் பரீட்சைகளை நடத்த மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நீட் 2021 தேர்வுகள் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் நடத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது