ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக Dr.ஜே.யு சந்திரகலா பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக Dr.ஜே.யு சந்திரகலா பொறுப்பேற்பு


ஏப்-17

ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக Dr.ஜே.யு சந்திரகலா  இன்று 17.06.2021 காலை 10-30 மணி அளவில் பொறுப் பேற்றுக்கொண்டார். இவர்  ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டாவது பெண் ஆட்சித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பதவி ஏற்றுக் கொண்டபின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியாவது:- 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய முடியும் என்பதை கண்டறிந்து உதவிகள் செய்யப்படும். பொதுமக்கள் தரும் பெட்டிஷன்கள் மீது விரைவாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தலைமையில்  இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கிராமப்புற மகளிர்களுக்கும் இளைஞர்களுக்கும்  தொழில் துவங்க ஆவண செய்யப்படும்.  என்று  அவர் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒலிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு