சென்னையில் நடுரோட்டில் போலீசுடன் மல்லு கட்டிய பெண் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் லாக்டவுன் அமலில் உள்ள நிலையில் நடுரோட்டில் போலீசுடன் பெண் ஒருவர் மல்லுக்கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யபட்டு வருகிறது.
கொரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 7-ந் தேதி வரை தளர்வுகளற்ற லாக்டவுனும் அதன் பின்னர் ஜூன் 14 வரை சில தளர்வுகளுடனும் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வலம் வந்தவர்களை போலீசார் மடக்கினர். அப்போது இளம் பெண் ஒருவர் ஓட்டி வந்த காரையும் போலீசார் மறித்தனர்.
ஆனால் அந்த இளம்பெண்ணின் தாயாரோ நடுரோட்டில் போலீசாருடன் ஆவேசமாக மல்லுக்கட்டினார். ஒருகட்டத்தில் மவனே.. உன் யூனிபார்மை கழட்டாம விடமாட்டேன் என ஒருமையிலும் அடுத்து கொச்சை வார்த்தையிலும் கடுமையாக திட்ட தொடங்கினார். போலீசாரும் அவரை சமாதானப்படுத்த முயற்சித்து பார்த்தனர்.
அந்த பெண்ணோ எதையும் கேட்காமல் தாம் ஒரு அட்வகேட் என ஆவேசத்துடன் நடுசாலையில் ருத்ரதாண்டவமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்கள் ஏற்படுத்திய தாக்கம் தற்போது அந்த பெண்ணை கைது செய்யும் அளவிற்கு கொண்டுபோய் விட்டுள்ளது அவர் மீது சென்னை போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
