ரவுடிகள், மணல் கடத்தல் கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும்திருவண்ணாமலை எஸ்.பி சிபிச்சக்கரவர்த்தி

ரவுடிகள், மணல் கடத்தல் கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும்திருவண்ணாமலை எஸ்.பி சிபிச்சக்கரவர்த்தி


இன்னும் சில மாதங்களில் 40 வயதைத் எட்டப்போகும் இவர் ஆறே மாதங்களில் 48 பேரை குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைக்கு அனுப்பியிருக்கிறார். ரவுடிகள், மணல் கடத்தல் கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறார் சிபிச்சக்கரவர்த்தி.  

கடலூரைச் சேர்ந்தவர், எம்.இ பட்டம் பெற்ற இவர், 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ் பணியைத் தொடங்கினார். நாகப்பட்டினம், ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியவர். தற்போது திருவண்ணாமலை மாவட்ட மக்களின் நம்பிக்கை நாயகனாக வலம் வருகிறார். பதவியேற்ற 11 மாதங்களில் மாவட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ரவுடிகள், மணல் கடத்தியவர்கள், சட்டவிரோத கருக்கலைப்பு மையம் நடத்தியவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாய்கிறது.

கடந்த மாதம் சூதாட்ட கும்பலால் கடத்தப்பட்ட சரவணன் என்பவரைக் கண்டுபிடிக்க மஃப்டியில் ஆபரேஷன் நடத்தி, 60 மணி நேரத்தில் மீட்டார். திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு வரும் 15 லட்சம் பேர் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தினார். தீபத்தின்போது கூட்டத்தில் தொலைந்துபோன 68 குழந்தைகளைக் கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். 

தீப நாள் அன்று போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, முதல் முறையாக ஆன்லைன் கார் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தினார். அதனால் பொதுமக்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லாமல் 800 கார்களை நகரத்துக்குள் பார்க்கிங் செய்ய முடிந்தது. 300 சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி திருவண்ணாமலை கிரிவலப் பாதையைக் கண்காணித்து வருகிறார். 

அனைவரிடமும் எளிமையாகப் பழகுவதாலேயே மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். 'ஆட்டோ ஓட்டுநர்கள், பூக்கடை வியாபாரிகள், டீக்கடைக்காரர்கள், சாலையோர பெட்டிக்கடை வியாபாரிகள் போன்றவர்களோடு கலகலப்பாகப் பழகுவார்' என்கிறார்கள் திருவண்ணாமலை மக்கள்

 கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி.முருகன்