உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'.. பள்ளி கல்வித்துறையிலும் ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்*

 *'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'.. பள்ளி கல்வித்துறையிலும் ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்

 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த மனுக்களை பரிசீலித்து தீர்வு காண ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.ஒருங்கிணைப்பு அலுவலராக ராமசுந்தரத்தை நியமித்து, பள்ளி கல்வி துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டள்ளார்

.உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் ஒவ்வொறு துறையிலும் உருவாக்கப்படுகிறது. இத்திட்த்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை மனு அளித்தவர்கள் அறிந்து கொள்ள முடியும். அவர்களின் குறைகள் அல்லது கோரிக்கைகள் இத்திட்டத்தில் கீழ் உடனடியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 பல்வேறு துறைகளை தொடர்ந்து பள்ளி கல்வி துறையிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு அலுவலராக ராமசுந்தரத்தை நியமித்து, பள்ளி கல்வி துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டள்ளார்

.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் படி பெறப்படும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்படுவதை கண்காணிக்கவும், அதில் குறைகள் ஏதும் இருப்பின் மாவட்ட மற்றும் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிவுறுத்திடவும் பள்ளி கல்வி இயக்கக அளவில் ஒருங்கிணைப்பு அலுவலராக ராமசந்திரன் நியமிக்கப்படுகிறார்" என்று கூறியுள்ளார், அவரை தொடர்பு கொள்ள தொலைப்பேசி எண் மற்றும் இமெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.