மாநில கொள்கை வளர்ச்சி குழுவின் துணைத் தலைவராக பேரா ஜெ. ஜெயரஞ்சன் நியனம்

மாநில கொள்கை வளர்ச்சி குழுவின் துணைத் தலைவராக பேரா ஜெ. ஜெயரஞ்சன் நியனம்

தமிழக அரசின் மாநில கொள்கை வளர்ச்சி குழுவின் துணைத் தலைவராக பொருளாதார அறிஞர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் மாநில திட்டக் குழு, கருணாநிதியால் 1971 ஆம் ஆண்டு மே 25-ந் தேதி ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழுவானது முதல்வர் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது.

Economist J. Jeyaranjan appoints as Vice Chairman of TN State Development Policy Council

மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாநில திட்டக் குழுவானது, கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ல் மாநில வளர்ச்சி குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

இதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநில வளர்ச்சி கொள்கைக் குழு பின்வருமாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் துணைத் தலைவர்

பேராசிரியர் இராம. சீனுவாசன், முழுநேர உறுப்பினர்

பகுதி நேர உறுப்பினர்களாக

பேராசிரியர் ம. விஜயபாஸ்கர்

பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்

மு. தீனபந்து,, ஐ.ஏ.எஸ் (ஓய்வு)

T.R.B. இராஜா, மன்னார்குடி சட்டசபை தொகுதி உறுப்பினர்

திருமதி மல்லிகா சீனிவாசன்

டாக்டர் திரு. ஜோ. அமலோற்பவநாதன்

சித்த மருத்துவர் கு. சிவராமன்

முனைவர் நர்த்தகி நடராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.