கூடுதல் போலீஸ் கமிஷனர் வெள்ளத்துரை என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்ட்'

 கூடுதல் போலீஸ் கமிஷனர் வெள்ளத்துரை  என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்ட்' 

'என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்ட்' வெள்ளத்துரையைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எந்த மாவட்டத்தில் பணியாற்றினாலும் இவரது அதிரடி நடவடிக்கை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது சென்னையில் பணியாற்றி வருகிறார்.

 2003-ம் ஆண்டு ரவுடி வீரமணி, 2004-ம் ஆண்டு வீரப்பன் ஆகியோரின் என்கவுன்டர் ஆபரேஷன்களின் முக்கிய பங்கு வகித்தவர். என்கவுன்டர் மட்டுமே இவரது அடையாளம் அல்ல. மானாமதுரையில் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டுக்கொடுத்தார். நிலத்தைப் போலியாகப் பத்திரம் செய்த மானாமதுரை பத்திர எழுத்தர் வேல்முருகனைக் கைது செய்தவர். 

ராமநாதபுரத்தில் மதுபான கடத்தல் கும்பலுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர். சாராய வியாபாரிகளின் மறுவாழ்வுக்காக 300 பேருக்குத் தமிழக அரசிடமிருந்து ரூ.30,000 வாங்கிக் கொடுத்திருக்கிறார். திருடுபோன நகைகளை உடனடியாக மீட்டுச் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

 "மானாமதுரையில் நான் இருந்தவரை எந்த மணல் கடத்தல் சம்பவமும் நடந்ததில்லை. டி.எஸ்.பி-யாக இருந்தபோது கந்துவட்டி தொழிலை ஒழித்தேன்" என்று பெருமைப்படச் சொல்கிறார். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் ஆடு, மாடுகளை வாங்கிக்கொடுத்துள்ளார். பல நாள்கள் தீராமல் இருந்த வழக்குகளை உடனடியாக முடித்துக் கொடுத்துள்ளார். 2013 முதல் 2019 செப்டம்பர் வரை ராமநாதபுரத்தில் பணியாற்றி வந்தார். நாடாளுமன்றத் தேர்தலின்போது சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட இவரது வயது 54. 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி .முருகன்