"'கொரோனா தற்காப்பு விழிப்புணா்வு பிரச்சார நிகழ்ச்சி!!!
மாவட்ட சிறு குறு தொழிற்ச்சாலைகள் சங்கம் சாா்பாக நமது மாவட்டத்திற்க்காக சுமாா் 1300 எண்ணிக்கை கொரோனா தற்காப்பு விழிப்புணர்வு பிரச்சார சுவரொட்டிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது. இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்குரிய டாக்டர். இரா. சிவக்குமார் இ.கா.ப. அவா்கள் கொரோனா தற்காப்பு விழிப்புணர்வு பிரச்சார சுவரொட்டிகளை இராணிப்பேட்டையில் உள்ள வங்கி, அம்மா உணவகம், ஏ.டி.எம் சேவை மையம், நியாயவிலை கடை, பெட்ரோல் நிலையம் ஆகிய இடங்களில் ஒட்டி துவக்கிவைத்தார்.
இந்த சுவரொட்டிகளை இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் அனைத்து வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகம் மற்றும் சிறு குறு தொழிற்ச்சாலைகளில் ஒட்ட மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து RADSMIA செயல்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட சிறு குறு தொழிற்ச்சாலைகள் சங்கத்தின் தலைவர் சந்திரகாசன், செயலாளர் புனிதவேல், சண்முகநாதன், புகழேந்தி, சுந்தரவேல், நல்லசாமி, முரளி, மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனா் ரா
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...

