போலிபத்திரங்கள் தாராளம்…! கூலிப்படைகள் உல்லாசம்காட்பாடியில் லேண்ட் கிராப்!!!

 போலிபத்திரங்கள் தாராளம்…! கூலிப்படைகள் உல்லாசம்காட்பாடியில் லேண்ட் கிராப்!


காட்பாடியில் போலி பத்திரம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயற்சி.. அடியாட்களுடன் நிலத்திற்கு சென்று அத்து மீறியவர்களை காட்பாடி போலீசார் மடக்கி பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு 

காட்பாடி அடுத்த கீழ்வடுகன்குட்டடை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் இவருக்கு சொந்தமான 50 சென்ட் இடத்தை ஏர் உழுது கடலை விதைத்துள்ளார் அந்த இடம் தனது தான் என்று வேலூர் ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்த பலராமன் மற்றும் கிருஷ்ணவேணி ஆகியோர் மகன் பாஸ்கர் மற்றும் காட்பாடியை சேர்ந்த கூலி ஆட்கள் சிலருடன் அந்த இடத்தில் அத்துமீறி நுழைந்து விளை நிலத்தை சேதப்படுத்தினர் வருவாய்த் துறையினரால் நடப்பட்டிருந்த கற்களையும் அகற்றியதோடு, உரிமையாளர் ரங்கநாதன் போட்டிருந்த குடிசையையும் சேதப்படுத்தியுள்ளனர்இதைக்கண்ட ரங்கநாதன் மகன் காளிதாஸ் உடனடியாக காட்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு அங்கு கூடியிருந்த கூலிப்படைஇனரை பிடிக்க முயற்சித்தார் அதில் சிக்கிய 6 பேர்களை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர் இதுகுறித்து ரங்கநாதன் மகன் காளிதாஸ் கூறுகையில், இந்த இடம் எங்களது மூதாதையர் சொத்து என்றும் 85 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் அனுபவித்து வருவதாகவும், பலராமன் கிருஷ்ணவேணி மற்றும் பாஸ்கர் ஆகியோர் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சில ஆட்களின் துணையோடு போலி பத்திரம் தயாரித்து அந்த இடம் தங்களது என்று தகராறு செய்வதாகவும் சொன்னார்

மேலும் அவர் தெரிவிக்கையில், சில அடியாட்களின் உதவியோடு எங்களை மிரட்டி இந்த இடத்தை அபகரிக்க முயல்வதாகவும் தமிழக முதல்வர் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டியும் கேட்டுக்கொண்டுள்ளார் .

ஏற்கெனவே காட்பாடியில் போலி பத்திரங்களால் பலர் இதைப்போன்று அவதிப்படுவது வாடிக்கையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இது போன்ற பஞ்சாயத்துக்களை நடத்தி கூலிப்படை கும்பல் உல்லாசமாக இருந்து வருகிறது.

மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்