உங்கள் ஊராட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிகொண்டு வரவும் தடுக்கவும் தகவல் மனு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பெரும்பாலான மக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பதிவை வெளியிடுகிறோம்.
இதோ உங்கள் ஊராட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிகொண்டு வரவும் தடுக்கவும் தகவல் மனு அனைவரும் பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
த.அ.உ.சட்டம் 2005 பிரிவு 6 (1) கீழ் தகவல் கோரி விண்ணப்பம்
அனுப்புநர்
பெயர் முகவரி
பெறுநர்
பொது தகவல் அலுவலர்
ஊராட்சிகள் (உதவி இயக்குநர்) அலுவலகம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
மாவட்டம்
பொருள்
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6 (1) கீழ் கீழ் காணும் தகவல்கள் வேண்டுகிறேன்
1)........... ஒன்றியம்............. கிராம பஞ்சாயத்தில் கடந்த .... ஆண்டுகளில் ம் தேதி முதல்.....ம் தேதி வரையிலான நூறு நாள் வேலைத் செய்தவர்களின் பட்டியல் அவரவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம் பட்டியல் இப்பணி சம்பந்தப்பட்ட பணி பதிவேடு வருகை பதிவேடு உள்பட அனைத்து கோப்புகளின் நகல்களுடன் தகவலாக வழங்கவும்
2) மேற்படி ஒன்றியம்........ கிராம பஞ்சாயத்தின்............ம்தேதி முதல்.........ம் தேதி வரையிலான காலத்தின் கூட்டக் குறிப்பேட்டின் அனைத்து பக்கங்களின் நகல் அளிக்க வேண்டுகிறேன்
3) மேற்படி......... கிராம பஞ்சாயத்தில் கடந்த.........ம் தேதி முதல்.........ம் தேதி வரையிலான காலத்தில் என்னென்ன விதமான சிவில் பணிகள் கட்டுமானங்கள் குழாய் இணைப்பு தெரு விளக்கு அமைத்தல் சாலை பாலம் அமைத்தல் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் கட்டிடங்கள் கட்டுதல் என நடைபெற்ற புதிய மற்றும் பழுது பார்ப்பு பணிகள்
(அ) பணிகள் ஒவ்வொன்றின் பெயர்கள். ஆ) திட்ட மதிப்பீடு. இ)பணி ஆரம்பிக்கப்பட்ட தேதி. ஈ)பணி முடிக்கப்பட்ட தேதி. உ) ஒவ்வொரு பணிக்கும் அளிக்கப்பட்ட காசோலைகளின் என்..தேதி...தொகை. ஊ) ஒவ்வொரு பணியும் செய்து முடித்த ஒப்பந்ததாரர் பெயர் வயது அவரின் முந்தைய தற்போதைய முழு முகவரி. எ) பணிகள் முடிக்கப்பட்டது என்று அளவு புத்தகம் (M . Book) நகல் ஆகிய தகவல்களை அளிக்க வேண்டுகிறேன்
4) கடந்த...........ம் தேதி முதல்......ம் தேதி வரையிலான காலத்தில் என்னென்ன விதமான செலவுகள் மேற்படி......
... கிராம பஞ்சாயத்தில் அந்த செலவுகள் ஒவ்வொன்றிற்கும் உள்ள (paid voucher)செலவு சீட்டுகளின் அனைத்து நகலையும் உரிய அலுவலரால் சான்றொப்பம் இட்டு அளிக்க வேண்டுகிறேன்
5) மேற்படி........... கிராம பஞ்சாயத்துக் கணக்கில் கடந்த....... முதல்........
வரையிலான காலத்தில் என்னென்ன விதமான நிதி வரவுகள் வந்துள்ளன அரசு நிதிகள் செலுத்தப்பட்டுள்ளது அந்த நிதிகள் எப்படி எப்படி செலவு செய்யப்பட்டது என்பதையும் தேதி வாரியாக காட்டும் அந்த பஞ்சாயத்தின்......
.. முதல்......தேதி வரையிலான அனைத்து மெயின் கணக்குப் புத்தகத்தின் மற்றும் வங்கியின் அனைத்து வகையான பாஸ் புத்தகத்தின் நகலையும் அளிக்க வேண்டுகிறேன்
6) மேற்படி......... கிராம பஞ்சாயத்தின் மீது உடனடி நிர்வாகக் கட்டுப்பாடு உள்ள அலுவலரின் பதிவு பெயர் இப் பதவியின் பெயர் எந்தெந்த தேதி முதல் எந்தெந்த தேதி வரை பணியாற்றினார்கள் அவர்களின் தற்போதைய அஞ்சல் விலாசம் என்னென்ன என்ற தகவலையும் ஒன்றிய ஆணையாளராகப் பணியாற்றிய அலுவலர்களின் பெயர் பணியாற்றிய காலம் அவர்களின் தற்போதைய விலாசம் ஆகிய தகவல்களை அளிக்க வேண்டுகிறேன் மேற்கண்ட கேள்வியின் அனைத்து ஆவணங்களையும் நேரில் பார்வையிட அனுமதி கோருகிறேன்
7) மேற்படி தகவல்களுக்குண்டான ஆவணங்களை பெற மொத்த பக்கம் கணக்கிட்டு அதற்குறிய கட்டணங்களை எங்கு எப்படி எவ்வாறு செலுத்த வேண்டும் என்பதனை எனக்கு உரிய காலத்திற்குள் தகவலாக வழங்கவும்
பொது தகவல் அலுவலர் மனுதாரர் கோரிய தகவல் தானா என்பதனை நன்கு உறுதி செய்த பின் அதனை மனுதாரருக்கு அனுப்ப வேண்டும் தவறுதலான தகவலை அனுப்பினால் பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கலாம் மத்திய தகவல் ஆணையம்
CIC MP/CI2014/000138 நாள் . 08..04..2015 என்பதனை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன்
மேற்படி தகவல்களை பெற ரூபாய் 10 க் கான நீதி மன்றம் வில்லை ஒட்டியுள்ளேன்
நாள்
இடம். இப்படிக்கு
