பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கிய பவானி எம்.எல்.ஏ

பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கிய பவானி எம்.எல்.ஏ.

ஈரோடு மாவட்டம்  பவானி சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கினார்.

         கடந்த சில மாதங்களாக ஈரோடு மாவட்டத்தில் குரானா  நோயின் வீரியம் அதிகரித்து காணப்படுவதால் தமிழக அரசு நோய் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் குறிப்பிட்ட தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அறிவித்திருந்தது.  மேலும் தடுப்பூசி முகாம்கள் மற்றும் குரானா பரிசோதனை முகாம்களும் நடத்தி மக்களை நோயின் வீரியத்தில் இருந்து காப்பாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் பவானி சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் தனது தொகுதியான  பவானி முழுவதும் ஊராட்சி ,பேரூராட்சி மற்றும் பவானி நகர் முழுவதும் என பொதுமக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் அனைவரும் தவறாமல் தினமும் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும் வெளியில் சென்று வந்தால் கை கால் முகங்களை கழுவி விட்டு வீட்டிற்குள் வர வேண்டும் என வலியுறுத்தினார். கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு ஊன்றுகோலாக இருக்க வேண்டும் எனவும் கூறினார். பவானி  காவல் அதிகாரி வடிவேல்  குமாரிடம் தற்போதைய நிலவரத்தையும் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்த்து மக்களை வழி முறைப்படுத்தும் படியும் கூறினார். இந்நிகழ்வில் பவானி நகரச் செயலாளர் கிருஷ்ணராஜ், பவானி நகராட்சி ஆணையாளர் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள், அதிமுக தகவல் தொழில்நுட்பத் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.