வேலூர் அதிமுகவினரை உதவி செய்ய விடாமல் தடுக்கும் திமுகவினர்.....! மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு எஸ்பியிடம் புகார்...!!

வேலூர் அதிமுகவினரை உதவி செய்ய விடாமல் தடுக்கும் திமுகவினர்.....! மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு எஸ்பியிடம் புகார்...!!


வேலூர் ஜுன் 10

வேலூர் மாநகர அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வழக்கறிஞர்கள் புடைசூழ வந்திருந்தார் விவரம் என்னவெனில்,  கொரோனா காலத்தில் அரும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக முறைப்படி அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது அப்படி வழங்கபடும் உதவிகள் குறித்து அக்கட்சியில் உள்ள தகவல் தொடர்பு பிரிவினர் பரப்புரை செய்துள்ளார்கள் இந்நிலையில் இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த சிலர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த தகவல் தொடர்பு நிர்வாகிகள் மீது போலிசில் புகார் அளித்திருப்பதாக தெரிகிறது இதை எஸ்.பி.க்கு சுட்டிக்காட்டும் வகையில், வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி. யிடம் அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் அப்பு கட்சியினருடன் சென்று புகார் மனுவை அளித்தார் அந்தமனுவில், தான் அதிமுக மாநகர மாவட்ட செயலாளராக பணியாற்றி வருவதாகவும் தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும், இருப்பினும் தொடர்ந்து கட்சி பணியாற்றி வருகிறேன் தற்போது கொரோனாபாதிப்பு உள்ள காலம் என்பதால் அரசியல் அமைப்பினர் உள்ளிட்ட அனைவரும் உதவி செய்யலாம் என அறிவித்திருந்த நிலையில் வேலூர் மாநகராட்சி பணியாற்றும் 4 ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கு அரசிடம் அனுமதி பெற்று கொரோனா கால அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி பொருட்களையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம் ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக திமுகவினர் அதிமுக மீது பொய்யான புகார்களை அளித்திருப்பதாகவும் இது தங்களுக்கு மன உளைச்சலையும் கலங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதால் புகார் அளித்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கேட்டுகொண்டுள்ளனர்அ.தி.மு.க.வின் தலைமைக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அவர்கள் வழிகாட்டுதலின் படி கழக வழக்கறிஞர்கள் புடை சூழ இந்த புகார் அளிக்கப்பட்டிருக்கிறது

 ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்....