காவா ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக இணைந்து நடத்திய மாபெரும் இலவச தடுப்பூசி முகாம்!!!!

 ""காவா ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக இணைந்து நடத்திய மாபெரும் இலவச தடுப்பூசி முகாம்!!!! 


காவா ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக இணைந்து நடத்திய மாபெரும் இலவச தடுப்பூசி முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக் கு காவா ஜூம்ஆ மஸ்ஜிதின் முத்தவல்லி அபுசாலிஹ் ஹாஜியார் தலைமை தாங்கினார். தமுமுக மாவட்ட தலைவர் முஹம்மது ஹசன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சர்ஆட்சியர் இளம்பகவத் அவர்களும் மற்றும் நாகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி அவர்களும் மற்றும் சுகாதார துறை துணை இயக்குநர் ஜெயப்பிரகாஷ் அவர்களும் கலந்துக்கொண்டு தடுப்பூசியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி பேசி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் இராணிப்பேட்டை நகராட்சி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் லவண்யா, சுகாரத்துறை அதிகாரி் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.நிகழ்சியின் ஏற்பாடுகளை காவா ஜூம்ஆ மஸ்ஜிதின் பட்டேல் ஹாஜி ஜமால்தீன்.பொருளாளர் ஹாஜி அக்பர் பாய் துணை முத்தவல்லி ஹாஜி அப்துல்லா(எ) பாபு நிர்வாகிகள் அஜந்தா தமீம்அண்ணன் தம்பி சம்சுதீன் சௌக் மஸ்ஜித் முத்தவல்லி ஹாஜி அப்துல்கரீம் தமுமுக மாவட்ட துணை தலைவர் ஹாஜி. ராஜா முஹம்மது துணைச்செயலாளர் ஆற்காடு சையத் கறீம் இராணிப்பேட்டை நகர தலைவர் அஸ்மத்துல்லா மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் சுலைமான். நகர முன்னாள் மாணவரணி செயலாளர் ஷாபுதீன் ராஜா முஹம்மது. ஹாபிழ் சம்சுதீன் மேலும் இந்நிகழ்ச்சியில் 18. வயது முதல் 44 வயதுள்ள 146 நபர்களும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 98 நபர்களும் கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 45 வயதுக்கு மேற்பட்ட 10 நபர்கள் கோவாக்ஸின் போட்டுக்கொண்டனர். ஆக 254 நபர்கள் இந்த முகாமினால் பயனடைந்தனர் 

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..