""கணவருடன்ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை!
பனப்பாக்கம் அடுத்த மேல்வெம்பாக்கம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் கதிர்வேல் இவருடைய மனைவி சாந்தி(25). இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் இவர்களுக்கு 2 வயதில் திவாகர் என்ற மகன் இருக்கின்றான். தினமும் இருவருக்கும் அவரது மனைவிக்கும் வாய்த்தகராறு சண்டைகள் ஏற்படுவது வழக்கம் இந்த நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்குமிடையே பயங்கரமான சண்டை ஏற்பட்ட நிலையில் கோபமடைந்த சாந்தி சுமார் 4.30 மணியளவில் யாருக்கும் தெரியாமல் குடியிருக்கும் சிமெண்ட் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் சாந்தி உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பனப்பாக்கம் அருகே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
