அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம்.. கூட்டணி கட்சி தலைவர் பரபரப்பு பேட்டி.!

அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம்.. கூட்டணி கட்சி தலைவர் பரபரப்பு பேட்டி.!


*தமிழகத்தில் பல மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், 9 புதிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடக்கவில்லை. மீதம் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே 2019 டிசம்பர் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. விடுபட்ட உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்துவது பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தள்ளிக்கொண்டு சென்றது.*

*சமீபத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.*

*இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்து பாஜக மாநில தலைவர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, உள்ளாட்சித்தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், சில நேரங்களில் சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருக்கும். உள்ளாட்சித் தேர்தல் அப்படியல்ல. பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைமை எப்போதும் கொள்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.*