பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுடன் சந்திப்பு....

 பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுடன் சந்திப்பு....


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் இன்று மதியம்.12.30. மணி அளவில் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அவரது அலுவலகத்தில் நமது சங்கத்தின் மாநில மாவட்ட தலைவர்கள் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர். நந்தகுமார் அவர்கள் தலைமையில் எவர்வின் DR. புருஷோத்தமன்.DR.J.. B. விமல். திருவள்ளூர் மாவட்ட தலைவர் DR.N.ராஜன். மாவட்ட துணைத்தலைவர் DR. செபஸ்டியன் மாவட்ட செயலாளர். DR.மணிவண்ணன். மெட்ரிகுலேஷன் நியூஸ் ஆசிரியர்.கே. ஆர். ரவிச்சந்திரன். கொளத்தூர் கிங்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி பிரவீன்குமார் . DR.விஜயகுமார் லோகியா. சட்ட ஆலோசகர்கள் 

 சாரநாத், கிங்ஸ்லி, சுரேஷ்குமார், ஆகியோர் கலந்து கொண்டு தனியார் பள்ளிகளுக்கு  தற்போது உள்ள பிரச்சனைகள் குறித்து விவரிக்கப்பட்டது.

நமது பிரச்சனைகள் அனைத்தையும் கவனமுடன் கேட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

 வருகின்ற திங்கட்கிழமை தமிழக முதல்வர் மாண்புமிகு மு க. ஸ்டாலின் அவர்களிடம்

 தமிழக முதல்வர் நிவாரண நிதியை நமது சங்கத்தின் சார்பில் பெருந்தொகை  வழங்குவதாக உறுதி அளித்துவிட்டு வந்திருக்கின்றோம்.

 அதற்கேற்றார்போல் பள்ளி நிர்வாகிகள் உங்கள் பங்களிப்பை உடனே அனுப்பி உதவிட வேண்டுமென்று அன்போடு வேண்டுகின்றோம்.

 அன்புடன் உங்கள் நந்தகுமார்