சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்பாட்டம்
எல்.பி.ஜி சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநில துணை செயலாளர் பிரபு பொது குழு உறுப்பினர் ஜெகநாதன் முன்னிலையில் சேலம் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழிலாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வலியுறுத்தி 100 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்சியில் செயலாளர் வீ.செந்தில்குமார், பொருளாளர் சிவ மனிகண்டன் மற்றும் பொதுக்குழு செயற்குழு மற்றும் சேலம் மாவட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
