ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளுக்கான வரைவறிக்கை தயார் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

 ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளுக்கான வரைவறிக்கை தயார் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி


தமிழ்நாட்டில் நீட் தேர்வு உட்பட எந்த நுழைவு தேர்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், மருத்துவ கல்விக்கான நுழைவு தேர்வான  நீட் தேர்வு உட்பட எந்த நுழைவு தேர்வும் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றார். திமுக தேர்தல் அறிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

ஆன்லைன் வகுப்பு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்டுள்ள குழு, வரைவறிக்கை தயார் செய்து வைத்திருப்பதாக  அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுமதிக்கு பின்னர், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். 

பள்ளி, கல்விக்கட்டணம் குறித்தும் அந்த குழு தாக்கல் செய்த வரைவறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.